×

பிரட் சில்லி

செய்முறை: பல்லாரியை நீளவாக்கிலும், குடமிளகாயை பொடியாகவும் நறுக்கவும். பூண்டை தட்டி வைக்கவும். வாணலியில் பிரட்டை வைத்து சுற்றிலும் பட்டர் ஊற்றி பிரட்டில் தேய்க்கவும். பிறகு மறுபுறம் திருப்பி போட்டு சுற்றிலும் பட்டரை ஊற்றி, பிரட்டை மேலும் தேய்த்து டோஸ்ட் பண்ணிக்கொள்ளவும். பிறகு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் நறுக்கிய பல்லாரியை போட்டு, அதோடு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பல்லாரி பொன்னிறமானதும் தட்டி வைத்த பூண்டு, குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். பிறகு அதனுடன் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி, இறுதியில் கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பிரெட் சில்லி ரெடி.

Tags : Brett Silly , Brett Silly
× RELATED சென்னையின் குடிநீர் தேவைக்காக ரூ.100 கோடியில் திருநின்றவூர் ஏரி புனரமைப்பு